தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட்டில் மின்சார கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட்டில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் மின்வாகன தொழிற்சாலையை சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கார் தொழிற்சாலை அமைக்கிறது. கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.