சென்னை: திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மனித நேய தோட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் 30ம் தேதி மரங்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், மரக்காடுகள் பகுதியை சீமான் நேற்று பார்வையிட்டு மரங்களை கட்டித்தழுவி முத்தமிட்டு மரங்களோடு பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காக பேசுவோம். இயற்கையை நேசி எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். இதனை தெரிவிக்க தான் மரங்கள் மாநாடு நடத்துகிறோம். புவி வெப்பமாவதாக கூறும் அரசு அதனை மரங்களை வைத்து வளர்க்க கற்றுக் கொடுக்கவில்லை என்பதை புரியவைக்கும் வகையில் மரம் மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மாநாடு நடைபெற உள்ள தோட்டம் அருகே சென்ற சீமான் அங்கு பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு நாய்கள் குரைப்பதை பார்த்து ரொம்ப பண்ணின்னா பூரா பிள்ளையையும் கொண்டுபோய் மாநாட்டில இறக்கி விடுவேன் என கூறினார். தவெக மாநாடு நடைபெறும் நிலையில் நாய்களை இறக்கிவிடுவேன் என்ற சீமானின் கிண்டல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.