திருக்கோவிலூர்: பெட்ரோல் பங்க்கில் ராமதாஸ் மற்றும் அன்புமணி அணியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அன்புமணி தரப்பு பாமக மாவட்டச் செயலாளர் செழியன் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். செழியனின் பெட்ரோல் பங்க்கில் ராமதாஸ் அணி மாவட்ட செயலாளர் டீசல் போட வந்துள்ளார். ராமதாஸ் அணி செயலாளர் ராஜ்குமாரின் காரில் வந்தவர்கள் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த செழியனுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
+
Advertisement