ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் நயினார் ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.. கோயில் அறங்காவலர் ராம்குமார் தலைமையில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திருச்செந்தூரில் மகா கும்பாபிஷேகம் மிக அற்புதமாக நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. எந்த கும்பாபிஷேகத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த கும்பாபிஷேகத்திற்கு அமைந்திருக்கிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களே இந்த கும்பாபிஷேகத்தை கண்டு ஆடிப்போய் உள்ளனர் ’’ என்று தெரிவித்தார்.
Advertisement