அரசு மருத்துவமனைகளில் இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவர் பற்றாக்குறை இருக்காது: மா.சுப்பிரமணியன் பேட்டி
திண்டுக்கல்: அரசு மருத்துவமனைகளில் இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவர் பற்றாக்குறை இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.2.20 கோடியில் சிடிஸ்கேனை திறந்து வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆஞ்சியோ சிகிச்சை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.


