டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30க்கு ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது. மத்தியில் பாஜக தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமையவுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைகிறது.
தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி துணையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. 2014, 2019ம் ஆண்டை தொடர்ந்து 2024லும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30க்கு ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.