Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: மாஜி அழகியை கொன்ற கொடூர கணவன்

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஜோக்சிமோவிச் (38). இவர், கடந்த 2008ம் ஆண்டு மிஸ் சுவிட்சர்லாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வானவர். இந்நிலையில் இவர், கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி அவரது கணவர் தாமசை கைது செய்தனர். மேலும் விசாரணையில், கிறிஸ்டினா தம்மை கத்தியால் தாக்க வந்ததாகவும், அவரிடமிருந்து தற்காத்து கொள்ளவே தாக்கினேன் என்று தாமஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில் கிறிஸ்டினாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், கிறிஸ்டினா கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாகவும் உடல் பாகங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு ரசாயனங்கள் கொண்டு சிதைக்கப்பட்டதாகவும் சில உடல் பாகங்கள் சகதியுடன் கலக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ஜாமின் கோரி தாமஸ் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.