சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை, பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். டிச.12ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் தஞ்சை தமிழ் பல்கலை.யில் முறைகேடாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. புகார் தொடர்பான விசாரணையை முறையாக மேற்கொள்ளாத விவகாரத்தில் நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement