கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்னபர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(41). இவர் பர்கூர்- ஜெகதேவி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தை, கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு எடுத்து மொத்தமாகவும், சில்லரையாகவும் ஜவுளிகளை விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வியாபாரத்தை முடித்து விட்டு, இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு 12 மணியளவில், திடீரென ஜவுளிக்கடை தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 8 மணி நேரத்துக்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், கடையில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.
Advertisement