லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென்னாப்பிரிக்கா அணி முதன் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி ரூ.30.80 கோடி பரிசுத்தொகை கிடைக்கும்.
இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும், 3ம் இடம் பிடித்ததால் ரூ.12.32 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும். 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.