மும்பை: தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா காரின் முதல் விற்பனையகம் ஜூலை 15-ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பான டெஸ்லா மின்சார கார்களின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்படுகிறது. டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படும். தொடக்கத்தில் சீனாவில் உள்ள டெஸ்லா ஆலையில் இருந்து கார்கள் இறக்குமதி செய்து விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement