ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் லோலாப்பில் உள்ள மார்கி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய பதிலடியில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47 ரைபிள், இரண்டு கையெறி குண்டு, 4 ஏகே ரைபிள் குண்டுகள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
+
Advertisement


