Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி : தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட நிர்வாக மாறுதலை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவிகளின் மாற்றுச்சான்றிதழ் வழங்குவதற்கு பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதுகலை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்குவதற்கு காரணமான முதன்மைக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஐயப்பன், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தங்கராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ராஜ்குமார், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் பிச்சைக்கனி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முருகையா, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாளர் ஜாக்டி மாரியப்பன், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகசுந்தரம், எஸ்.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆயிஷா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜ்பூர்ரகுமான் சிறப்புரையாற்றினார்.ராஜ்குமார், சித்திர சபாபதி, சணமுகசுந்தரம், பாக்கியராஜ், நெடுஞ்செழியன், இசக்கியப்பன், முனீஸ்வரன், ராமசாமி, கார்த்திகேயன், முத்துசாமி, முப்புடாதி செல்வராஜ், ரமேஷ், மாடசாமி மற்றும் 100 பெண் ஆசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொருளாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.