சென்னை: சென்னையில் ஜூலை 11ம் தேதி தொழில் முனைவோருக்கான டெண்டர் வழிமுறை பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் டெண்டர் நடைமுறை (GeM போர்டல்) பயிற்சி, வரும் ஜூலை 11ம் தேதி (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) நடைபெற உள்ளது. சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் பயிற்சி நடைபெறும் நடைபெறுகிறது.
புதிய தொழில்முனைவோர் (ஆரம்பநிலை) மற்றும் அனுபவம் வாய்ந்த வணிகர்கள் தேசிய மின்வணிக GeM தளத்தின் மூலம் மத்திய அரசு உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் இணைந்து விண்ணப்பிப்பதற்கான பயிற்சி. பொது கொள்முதல், பொது கொள்முதல் பயன்பாமை, GeM அறிமுகம், விற்பனையாளர்களுக்கான GeM நன்மைகள், விற்பனையாளர்களுக்கான GeM ஆன்போர்டிங் நடைமுறை, GeM கொள்முதல் முறைகள், GeM ஏல நடைமுறை, GeM ஒப்பந்தம் பங்கெடுப்பதற்கான நடைமுறை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் Website: www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337/9360221280. முன்பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


