Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் கோயில் உண்டியலில் ரூ.4 கோடி சொத்து பத்திரத்தை போட்ட மாஜி ராணுவ வீரர்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த படவேடு, கோணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(65), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி, அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை. இவர்களது மகள்கள் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த விஜயனை மகள்கள் சரிவர கவனிக்காமலும், மதிக்காமலும் இருந்துள்ளனர்.

இதையடுத்து தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் தனக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான 2 வீட்டின் பத்திரத்தை படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் உண்டியலில் சில வாரங்களுக்கு முன்பு காணிக்கையாக போட்டுள்ளார். தகவலறிந்த விஜயனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தகராறு செய்து, பத்திரத்தை திருப்பி பெற்றுத்தருமாறு கூறி அவரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விஜயன் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை என்னும் பணி நடந்தது. அப்போது அங்கு சென்ற விஜயன், தான் உண்டியலில் செலுத்திய 2 வீட்டின் சொத்து பத்திரத்தின்படி, அவற்றை கோயில் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.