Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!!

மதுரை: தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தெலுங்கு மக்கள் சார்பாக நடிகை கஸ்தூரி மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி பிராமணர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு சமூதாய பெண்களை இழிவு சொல்லுடன் அந்த கூட்டத்தில் பேசி இருப்பதாகவும். இது தேவையில்லாமல் இனப்பிரச்சனையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் வகையில் உள்நோக்கத்தோடு நடந்த செயல் என கூறப்பட்டது. கஸ்தூரியின் பேச்சு, தெலுங்கு பேசும் 2 கோடி மக்களை வேதனை அடைய வைத்துள்ளதாகவும் மனுவில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மேலும், அவர் பின்புலத்தில் யார் செயல்பட்டார்கள் என்பதும் தெரிந்து கொண்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சட்ட ஒழுங்கை சீர் கெடுக்கும் வகையில் இது போன்று பேசி இருக்கிறார். விளம்பரத்தை தேடுவதற்காக இது போன்று பேசினாரா அல்லது தொடர்ந்து இச்சமூக மக்களை இழிவு படுத்துவதற்காக பேசினாரா என்பதை ஆராய்ந்து அதற்கான நனவாடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வருகின்ற 10ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மிக பெரிய அளவில் தெலுங்கு இன மக்களை வைத்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை கஸ்தூரி பேசிய இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.