ஹைதராபாத்: தெலுங்கானாவில் நகைக் கடையில் ரூ.18 கோடி நகைகளை கொள்ளையடித்தது உ.பி.யைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்துள்ளது. ஃபாஸ்ட் புட் கடை வைப்பதாகக் கூறி 2 மாதங்களுக்கு முன்பு பழைய வீட்டை ஒரு கும்பல் வாடகைக்கு எடுத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டையில் கிஷோர் என்பவரின் நகைக் கடையின் சுவரை துளையிட்டு நேற்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. கடை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வுசெய்த போலீசார் 5 பேர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. நகைக்கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பழைய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்ததை போலீசார் அடையாளம் கண்டனர்.
+
Advertisement