ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஜவஹர் நகரில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த குழந்தையை தலை முடியை கவ்வி தெருநாய்கள் இழுத்து சென்றது. சம்பவ இடத்தில் சிதறி கிடந்த குழந்தையின் தலை முடியை பார்த்து பொதுமக்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Advertisement