Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆசியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 2 நாட்களுக்கு நடைபெறும்

சென்னை: 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர், இடைநிலை ஆசிரியர், காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு 12.06.2025 மற்றும் 13.06.2025 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறுதெரிவித்துக் கொள்ளப்படுகிறது