ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: தீபாவளி பண்டிகையன்று அதிக மது விற்பனைக்காக எந்த கூடுதல் நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அவ்வாறு கூறினால் அது தவறு. இது தானாக ஒவ்வொரு ஆண்டும் கூடுவது வழக்கமானது. அரசு தனி முயற்சி ஏதும் எடுக்கவில்லை. படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்கிறோம். 500 கடைகளை மூடி உள்ளோம். மது பழக்கமுள்ளமாணவர்களை வெளியே கொண்டு வர, பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிவிட்டு செல்ல முடியாது என்பதை நடைமுறை சிக்கல் மூலம் அறிந்து செயல்படுகிறது.
தனியார் பார்கள், அரசு வழிகாட்டுதல் நெறிமுறை, சட்ட திட்டத்தில்தான் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிகமாக லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
