தமிழ்நாடு முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்களை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்களை இன்று சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 1,256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும் இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை தோறும் நடைபெறும்.