தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 'அப்பா' செயலி, விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
கடலூர் : தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 'அப்பா' செயலி, விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடக்கும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்வில் வெளியீடு செய்யப்பட்டது. அரசுப் பள்ளிகளில் ரூ.177.38 கோடியில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் திருப்பயரில் தனியார் பள்ளியில் பெற்றோர்களை கொண்டாடுவோம் விழா நடைபெறுகிறது.


