Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 100 அடி ஆழத்தில் நேற்று 18 தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த பெரிய ராட்சத பாறைகள் திடீரென  மேலே இருந்து உருளத்தொடங்கியதில் 6 தொழிலாளர்கள் பாறைகளில் சிக்கி கொண்டனர்.  4 பேரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், 5-வது நபரின் உடலும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்துள்ளதால், மண்ணின் ஈரத்தன்மையால் பிடிமானம் இழந்து கற்கள் சரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. விபத்தை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பு நடைமுறைகளை குவாரிகள் முறையாக பின்பற்றுகின்றனவா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.