Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடப்பாண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது : தமிழக காவல்துறை டிஜிபி தகவல்

சென்னை : கடந்த 12 ஆண்டுகளை விட 2024ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளன என்று தமிழக காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2023ம் ஆண்டைவிட 2024ல் கொலை, காயம், கலவரம் உள்ளிட்ட குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. 2017-2020 வரை கொலை வழக்குகள் அதிகரித்து 2019ம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின.2021 மற்றும் அதற்கு பிறகு கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

கடந்த 12 ஆண்டுகளை விட 2024ல் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. 2012ல் மாதத்துக்கு சராசரியாக 161 வழக்குகள் பதிவு, 2021ல் மாதம் 130ஆக குறைந்தன. 2025 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 120 ஆக கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 6 ஆண்டில் மிகக் குறைந்த வழக்குகள் 2024ல் பதிவாகின. நடப்பாண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் பெற்றுத் தரப்படுகின்றன."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.