Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கையான ஒற்றை சாளர முறையை அமல்படுத்த தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் விடுதி சார்ந்த அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக மனு அளித்து வந்த நிலையில், இதை ஏற்று தமிழ்நாடு அரசு எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் விடுதிகளுக்கு உரிமை வழங்குதல் திட்டத்தை வகுத்து கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, இச்சங்கத்தினர் சோழிங்கநல்லூர் முதல் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை விடுதி சம்பந்தமான அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சென்று இனிப்பு வழங்கினர்.

பின்னர் சங்கத்தின் மாநில தலைவர் லயன் ஏ.சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக முதல்வர் எளிமை, ஆளுமை திட்டத்தின் கீழ் எங்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆயிரம் விடுதி உரிமையாளர்கள், 2 லட்சம் ஊழியர்கள், 20 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்க விடுதி, ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு கோடிக்கு மேல் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விடுதிகளுக்கு உரிமை வழங்குதலை ஒற்றை சாளர முறையில் அறிவித்தமைக்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதேபோல் மாநிலம் முழுவதும் விடுதி உரிமையாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்க உள்ளோம்,’’ என்றார்.

நிகழ்ச்சியில், சங்க செயலாளர் ஆர்.வி.சுப்பையா, அறங்காவலர் கார்த்திக், இணை தலைவர் சீனிவாசலு, லேகா சீனிவாசலு, சின்ன ராஜா, சுப்பையா மற்றும் நிர்வாகிகள் காந்தி, பாலா, எழிலரசு, அர்ஜூன், திருஞானம், மற்றும் கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.