Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேர் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மாநகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஊரக வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் டிஆர்ஓவாக இருந்த துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராகவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக பிரிவு இணை செயலாளராகவும், கைவினை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக இருந்த கவிதா ராமு, அருங்காட்சியக இயக்குநராகவும், பவர் பைனான்ஸ் நிர்வாக இயக்குநராக இருந்த அம்பலவாணன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை இணை செயலாளராக இருந்த கிருஷ்ணன் உன்னி, கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட திட்ட அதிகாரியாக இருந்த சுகபுத்ரா, நெல்லை மாநகராட்சி ஆணையராகவும், தேர்தல் பிரிவு இணை தேர்தல் அதிகாரியாக இருந்த காந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், பொதுத்துறை துணை செயலாளராக இருந்த அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராகவும், நாகப்பட்டினம் திட்ட அதிகாரியாக இருந்த ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராகவும், சென்னை அரசு விருந்தினர் இல்ல வரவேற்பு அதிகாரியாக இருந்த கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் பொது மேலாளராக இருந்த சதீஷ், ஈரோடு மாவட்ட திட்ட அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கைத்தறித்துறை ஆணையராக இருந்த விவேகானந்தன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் லிமிடெட் நிர்வாக இயக்குநராகவும், இந்தத்துறையில் இருந்த ஹனீஸ் சாப்ரா, புதிய திருப்பூர் மேம்பாடு கழக நிர்வாக இயக்குநராவும், பொதுத்துணை கூடுதல் செயலாளராக இருந்த சிவஞானம், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரியாகவும், தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கழகம் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநராக இருந்த அமிர்தஜோதி, கைவினை மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.