சென்னை: தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசியது. இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையில் இதே நிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்றும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்.
தமிழகத்தில் வறண்ட வானிலைநிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 2ம் தேதி வரையில் வெயில் மற்றும் வெப்பம் நீடிக்கும் வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளை பொறுத்தவரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.


