வேதாரண்யம்: மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டையில் இருந்து மீனவர் கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 17ம்தேதி கோடியக்கரை தென்கிழக்கே ஐந்து கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகியோரை இலங்கை கடற் கொள்ளையர்கள் 3 பேர், கத்தி மற்றும் கட்டையால் தாக்கி ஜி.பி.எஸ்.கருவி, செல்போன், வாக்கிடாக்கி உள்ளிட்ட ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்து சென்றதாக இலங்கை கடற்கொள்ளையர்கள் மூன்று பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement


