Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் சனாதன சக்திகளுக்கு இடமில்லை; 2026 தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிதான் வெற்றி பெறும்: தொல்.திருமாவளவன் திட்டவட்டம்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகார வெற்றிவிழா மாநாடு நேற்றிரவு நடந்தது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசியதாவது: சிதம்பரம் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 3 முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்கு தமிழக முதல்வர் இரண்டு சிறுத்தை வெற்றிபெற செய்ய 2 சிங்கங்களை இறக்கியுள்ளேன் என்று தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தை சிறுத்தைகளின் தாய்மடி என்று கூறினால் காட்டுமன்னார்கோவில் தாய் கர்ப்ப கிரகம், ஒரு லட்சத்துக்கு மேல் வாக்கு பெற்றதற்கு காரணம் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்சல்வம், சிவசங்கர், தமிழக முதல்வர் உள்ளிட்ட திமுகவினருக்கு லட்சோப லட்சம் நன்றியை விடுதலை சிறுத்தைகள் கட்சி காணிக்கை செலுத்துகிறது.

சனாதா சக்திகள் இந்த மண்ணில் வேர் ஊன்றக்கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அவர் பெரியாரின் மடியில் தவழ்ந்தவர், அண்ணாவின் மடியில் தவழ்ந்தவர்,அண்ணாவை தூக்கி கொண்டாடியவர், அதனால்தான் அவருடன் நாம் இணைந்து களமாடுகிறோம். 2026ல் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகவேண்டும் என்பதை விட, குறுக்கு வழியில் கொல்லைப்புற வழியிலே சனாதன சக்திகள் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கு உள்ளது. பாஜக போன்ற சனாதான சக்திகளை வலுப்பெறவிடக்கூடாது. அதை வீழ்த்த வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது. சனாதான சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை சவாலாக இந்த தேர்தலை எதிர்கொள்ளப்போகிறோம்.

2026ம் ஆண்டு நம்மால் இதே போன்று ஒரு வரலாற்று சாதனை படைக்க முடியும். மதவாத அரசியலை உயர்த்தி பிடிக்கும் கும்பலை விரட்டியடிக்க முடியும். அவர்களை தோளில் சுமக்கவேண்டாம் என்றும் அதுவும் ஒரு திராவிட கட்சி என்கிற அடிப்படையில் அதிமுகவுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். ஜெயலலிதா அம்மையார் கூறினார் மோடியா, இந்த லேடியா மோதி பார்ப்போம் என கூறினார். எடப்பாடி பழனிசாமி திமுகவை வீழ்த்துவது என்று, அதிமுக வாக்கு வங்கியை அழிக்கவேண்டாம. எளிதாக மாய வலையில் சிக்க மாட்டார்கள். 2026 ல் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தான் வெற்றியை வழங்குவார்கள். இவ்வாறு பேசினார்.