சென்னை: தமிழ்நாட்டில் ஜாதி, மதங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலே, திருவிழாக்களின் பெயராலே யாரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. மதத்தின் பெயரால் அரசியல் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் சகோதரர்களாக வாழ்கின்றனர். மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது.
+
Advertisement

