Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சேர்க்கைக்கு ஜூன் 8 கடைசி நாள்: இதுவரை 31,545 பேர் விண்ணப்பிப்பு

கோவை:தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளில் 4,405 இடங்களும் என மொத்தம் 6,921 இடங்கள் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை பிரிவில் 340 இடங்கள் உள்ளது. இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மே 9ம் தேதி முதல் http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வரும் 8ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், வேளாண் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு தற்போது வரை 31,545 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு 1,690 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் இணையதளத்தில் பெறப்பட்டுள்ளன. விவரங்களுக்கு 9488635077, 9486425076 என்ற எண்ணிலும், ugadmissions@tnau.ac.in மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) பாடங்களுக்கான விவரங்களை 9865703537 மற்றும் 9442029913 என்ற எண்களிலும், agridean2015@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1,240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதுவரை 1,309 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக வேளாண் பல்கலை முதன்மையர் வெங்கடேச பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.