தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் பாஜகவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. பாஜக 4 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணி தலைவர்களை களமிறக்கியும் பாஜகவால் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. தெலுங்கானா புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்ட தமிழசையும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Advertisement