சென்னை: தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு அளித்துள்ளார். தூத்துக்குடி சாத்தான்குளத்தில் நேற்று சாலையோரத்தில் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக விழுந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
+
Advertisement


