Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள 5,096 பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து நடுநிலை மதிப்பீடு: 13ம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 96 பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து நடுநிலை மதிப்பீடு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் 1, 2 மற்றும் 3ம் வகுப்புகளில் கற்பித்தல், கற்றலின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கியது. 2025ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அடைவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நடுநிலை மதிப்பீடு (மிட்லைன் அசெஸ்மெண்ட்) செய்வதற்காக நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 96 பள்ளிகளில் இந்த மதிப்பீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 135 பள்ளிகள் (சென்னை 136 பள்ளிகள், நீலகிரி 100 பள்ளிகள் தவிர) வீதம் 5 ஆயிரத்து 96 பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,620 மாணவ-மாணவிகள் என மொத்தம் 61 ஆயிரத்து 560 மாணவ-மாணவிகளிடம் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த மதிப்பீடு பணிக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 144 கணக்கெடுப்பாளர்கள் வீதம் 5,472 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு முதுநிலை ஆசிரியருடன் சேர்ந்து இந்த மதிப்பீடு பணியை இன்று முதல் 13ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.