திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் விற்பனை தொடர்பாக காவல் துறை மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல. மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டினை அரசே நடத்த வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் அடுத்த வாரம் முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


