சென்னை: தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்று தந்தவர் கலைஞர் என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். "ஒரு புதுமைத் தமிழ்நாட்டை தனது ஆளுமையால் உருவாக்கியவர் கலைஞர். மக்களின் இதயச் சிம்மாசனத்தில் என்றைக்கும் வீற்றிருப்பவர் கலைஞர். தமிழ் செம்மொழியானதால்தான் வடமொழியான சமஸ்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதி கிடைத்தது. பகை பாராட்டியவர்களுக்கும் வழிகாட்டிய மானுடநேயத்தின் மறுபெயரே திராவிடம்" என கலைஞரின் பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் நிலையில் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Advertisement


