சென்னை: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணியளவில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கவர்னருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு செல்லும் கவர்னர், வரும் 20ம் தேதி வியாழக்கிழமை, இரவு 8.20 மணிக்கு, டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னை திரும்புகிறார்.
கவர்னரின் டெல்லி பயணம் வழக்கமான சொந்த பயணம்தான் என்றும், அதில் குறிப்பிடத்தக்க விசேஷங்கள் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் கவர்னர் ரவி, டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.