Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் தனியார் பல்கலை.களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்விக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளில் 200% அதிகரிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பல்கலை.களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்விக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளில் 200% சதவீதம் உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 77 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் மொத்தமாக 11,700 மருத்துவ இடங்கள் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் என 21 கல்லூரிகள் உள்ளது. இதில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்விக் கட்டணம் என்பது 2015ம் ஆண்டு 10 லட்சமாக இருந்த நிலையில் நடப்பாண்டு கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதன் அடிப்படையில் 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 200 சதவீதம் எம்.பி.பி.எஸ் கல்விக்கட்டணம் உயர்ந்துள்ளது. இந்தாண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பு மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான சுயநிதி கல்லூரிகளுக்கு உண்டான மருத்துவ கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் அளவில் உயர்த்தப்பட்டு இருப்பதாக நேற்றைய தினம் மருத்துவ கல்வி இயக்குநரகம் தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான கல்வி கட்டணம் 200 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 10 லட்சம் வீதம் இருந்த நிலையில் 2025ம் ஆண்டு சேரக்கூடிய மாணவர்களின் கல்வி கட்டணம் 30 லட்சமாக உயர்ந்துள்ளது. இது குறித்து தனியார் நிகர்நிலை பல்கலை கழகங்களிலும் மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணம் என்பது 1.5 கோடி என்ற அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியது.