Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.09.2024) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, தென்கொரியாவில் நடைபெற உள்ள 2024 உலக டேக்வாண்டோ ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனை ஆர்.ஜனனிக்கு செலவீனத் தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். மேலும் கம்போடியாவில் 06.10.2024 முதல் 13.10.2024 வரை நடைபெற உள்ள ஆசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மற்றும் உஸ்பெக்கிஸ்தானில் 24.09.2024 முதல் 29.09.2024 வரை நடைபெற உள்ள கிக் பாக்ஸிங் உலக கோப்பைப் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர், வீராங்கனைகளுக்கு செலவீனத் தொகையாக தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

ஸ்பெயினில் நடைபெற உள்ள உலக ஸ்ட்ராங்மேன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள டி.கண்ணனுக்கு செலவீனத் தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும், உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற உள்ள 8வது ஆசிய பென்காக் சிலாட் 2024 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 7 வீரர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் மற்றும் சீனாவில் 28.09.2024 மற்றும் 29.09.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள WDSF (World Dance Sport Federation) உலக பிரேக்கிங் நடன விளையாட்டு யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள பிரேம் காந்தி மற்றும் ஆராதனா ஆகியோருக்கு செலவீனத் தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மற்றும் அ.கருணாசாகர், ஆர்.பிரணவ் சாய் இருவக்கும் ஸ்கேட்டிங் உபகரணங்கள் வாங்குவதற்காக தலா ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையினை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.