Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

செயின்ட் லூசியா: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்தை, ஆஸ்திரேலியா வீழ்த்தியதன் காரணமாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஸ்காட்லாந்து தொடரிலிருந்து வெளியேறியது.

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இன்று செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 68 ரன், ஸ்டாய்னிஸ் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியதன் காரணமாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் தோல்வியை தழுவி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து ஸ்காட்லாந்த்து அணி தொடரிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா சமன் செய்தது. ஏற்கனவே இந்தியா, இங்கிலாந்து தலா 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.