Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுவிஸ் வங்கிகளில் குவியும் இந்தியர்களின் பணம்: கடந்த ஆண்டில் 3 மடங்கு அதிகரிப்பு..!

சூரிச்: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் மற்றும் பல நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பு டெபாசிட் செய்யப்பட்டிருந்த இந்தியர்களின் பணம் குறித்த விவரங்களை தற்போது சுவிஸ் தேசிய வங்கி வழங்கி இருக்கிறது.

இந்தியர்களின் ரூ.37,600 கோடி பணம் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் ஆகும். இந்த பணம் பெரும்பாலும் வங்கிகள், நிறுவனங்கள் போன்றவற்றின் பணமாகும். தனிநபர் டெபாசிட் வெறும் 11 சதவீதம் அளவுக்கே அதிகரித்து இருக்கிறது. அதே போன்று தனிநபர் டெபாசிட் சுமார் ரூ.3,675 கோடியாக உள்ளது.

இது மொத்த பணத்தில் 10-ல் ஒரு பங்காகும். இந்த பணம் பெரும்பாலும் வங்கிகள், நிறுவனங்கள் போன்றவற்றின் பணமாகும். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் இந்த அளவு அதிகரித்து இருப்பது கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். சுவிஸ் வங்கிகளில் சாதனை அளவாக கடந்த 2006-ல் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்தது. பின்னர் இது படிப்படியாக சரிவடைந்து வருகிறது. அதேநேரம் 2011, 2017, 2020, 2022 மற்றும் 2023 ஆகிய சில ஆண்டுகளில் மட்டும் சிறிது ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.