பேசல்: சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீரர் கிவானி பெட்ஷி பெர்ரிகார்ட் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் (22 வயது, 19வது ரேங்க்) மோதிய பெர்ரிகார்ட் (21 வயது, 50வது ரேங்க்) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற முதல் ‘ஏடிபி 500’ சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 1975ல் அறிமுகமாக இந்த தொடரில் பட்டம் வென்றவர்களில், இவர் தான் தரவரிசையில் மிகவும் பின்தங்கியவர் ஆவார்.
Advertisement


