புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.