சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை அயனாவரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. விலங்குகளை விட மிகவும் கீழ்த்தரமாக மனித விலங்குகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த அந்த கயவர்களை இந்த நாடும் மன்னிக்காது. தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள். குற்றவாளிகளுக்கு போக்சோ தண்டனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement


