Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டு பரணில் பதுங்கல் 7 மணி நேரம் போலீசை தவிக்கவிட்ட மாணவன்

விராலிமலை: புதுகை அருகே பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டு பரணில் மாணவன் பதுங்கிய சம்பவத்தில் போலீஸ், தீயணைப்பு வீரர்கள் போராட்டம் 7 மணி நேரம் அலைகழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வாதிரிபட்டியை சேர்ந்தவர் முத்து (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(31). இவர்களுக்கு 7ம்வகுப்பு படிக்கும் 12வயதில் ஒரு மகளும், அதர்வா (9) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் அதர்வா வாதிரிப்பட்டி தொடக்க பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த மாணவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் காலை 7 மணி முதல் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. தொடர்ந்து பள்ளி சென்று சக மாணவர்களிடம் விசாரித்த போது மாணவன் அங்கும் செல்லவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து செய்வது அறியாமல் திகைத்த பெற்றோர், அன்னவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிறுவன் குளத்திற்கு குளிக்க சென்று சகதியில் சிக்கியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வாதிரிப்பட்டி சென்ற வீரர்கள் குளத்துக்குள் இறங்கி சல்லடை போட்டு மாணவனை தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்த பெற்றோர், பரண் மேலிருந்து சத்தம் வருவதை அறிந்து ஏணிப்படி மூலம் பரணுக்கு சென்று பார்த்த போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுக்கு மத்தியில் அதர்வா படுத்து உறங்கி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அதர்வாவை கீழே அழைத்து வந்து விசாரித்ததில், பள்ளிக்கு செல்ல மனம் இல்லாததால் பயந்து பரணில் படுத்து கொண்டது தெரிய வந்தது. 7 மணி நேர போட்டத்திற்கு பின்னர் மாணவன் கண்டு பிடிக்கப்பட்டது பெற்றோர் மட்டுமல்லாது போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.