Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்த திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 29ம் தேதி சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி ஓட்டம், குதித்தல், எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் மற்றும் வயதுப் பிரிவு 6, 8, 10 வயதுக்குட்பட்டோர், 12 வயதிற்குட்பட்டவர்கள், 17 வயதிற்குட்பட்டவர்கள், வயது வரம்பு அற்றோர் என 6 பிரிவுகளில் தடகள போட்டி நடைபெறுகிறது.

எனவே போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 25 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 90874666646, 9363621687 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.