சென்னை: நடப்பாண்டு பி.எட். படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கலந்தாய்வுக்கு எப்போது வர வேண்டும் உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு அனுப்பியுள்ளதாக லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுபாஷினி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் பி.எட். படிப்பில், தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்காக ஆன்லைன் மூலம் மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் செப்.30ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் பாடவாரியாக நடைபெற உள்ளது. மாணவர்கள் எந்த தேதியில், எந்தெந்த நேரத்தில் கலந்தாய்வுக்கு வர வேண்டும் போன்ற தகவல்களை எஸ்எம்எஸ் மற்றும் மெயில் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், காலை 9 மணி முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெறும் என்றும் லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் பாடவாரியாக
அக்.14 காலை சிறப்பு மற்றும் எஸ்.டி பிரிவினருக்கும்
மதியம் பி.இ முடித்தவர்கள் மற்றும் வரலாறு
பிரிவினருக்கான கலந்தாய்வு
அக்.15 காலை தாவரவியல், விலங்கியல்,
மதியம் இயற்பியல் மற்றும் வேதியியல்(ஆண்கள்)
அக்.16 காலை கணிதம் ( ஆண்கள்) மற்றும் புவியியல்
மதியம் கணினி அறிவியல், மனை அறிவியல்,
பொருளாதாரம், வணிகவியல்
அக்.17 காலை இயற்பியல் (பெண்கள்)
மதியம் வேதியியல் (பெண்கள்)
அக்.18 காலை கணிதம் (பெண்கள்)
மதியம் தமிழ் மற்றும் ஆங்கிலம் (ஆண்கள்)
அக்.19 காலை தமிழ் (பெண்கள்)
மதியம் ஆங்கிலம் (பெண்கள்)


