Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கையுடன் முதல் டெஸ்ட்: வங்கதேசம் 484 ரன் குவிப்பு

காலே: வங்கதேச கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய முதல் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேசம், 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நஜ்முல் - முஷ்பிகுர் இணை, 264 ரன்கள் குவித்திருந்த நிலையில், நஜ்முல் 148 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த லிட்டன் தாஸ், முஷ்பிகுர் இணையும் பொறுப்புடன் ஆடி 149 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், முஷ்பிகுர் 163 ரன்னில் ஆட்டமிழந்தார். பின், சிறிது நேரத்தில் லிட்டன் தாஸ் 90 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், வங்கதேசம், 9 விக்கெட் இழந்து 484 ரன்கள் குவித்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர உள்ளது.