கடலூர்: திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மாடு மோதி கீழே விழுந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பேருந்து ஏறியது. கீழே விழுந்த பாரதிதாசன் மீது அரசு பேருந்து ஏறியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்த பாரதிதாசன் திட்டக்குடி காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்தை சந்திப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
+
Advertisement