Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோள்களின் செயல்பாடுகள் குறித்து விண்வெளி, வானியல் குறித்த விழிப்புணர்வு

*ஏராளமான மாணவர்கள் கண்டுகளிப்பு

திருவாரூர் : திருவாரூரில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விண்வெளி மற்றும் வானியல் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.சென்னை வானியல் குழுவை சேர்ந்த சிவா, விஜய் மற்றும் லீனஸ் ஆகியோர் தமிழக முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சூரியன் சந்திரன் மற்றும் கோள்கள் குறித்து அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார்கள் அந்த வகையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் விண்வெளி மற்றும் வானியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.

இதில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விண்வெளி மற்றும் வானியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை இக் குழு நடத்தியது. இதில் கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன, சூரிய மண்டலத்தின் பரப்பளவு என்ன என்பது போன்ற சிக்கலான கருத்துகளை எளிதில் புரிய செய்கின்ற செய்முறை விளக்கங்களை நிகழ்வுகளில் வழங்குகின்றனர்.பாதுகாப்பான சூரிய வடிகட்டிகள் பொருத்தப்பட்ட தொலைநோக்கிகள் மூலம் சூரியனை காணச் செய்தனர்.

மேலும் சந்திரன், கிரகங்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பிற வான்பொருட்களையும் காணும் அனுபவத்தையும் மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர். இந்த நிகழ்வை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் நேரில் வந்து பார்வையிட்டு மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தார்.